தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போலி பணி நியமன ஆணை - ஆசிரியர் மீது புகார் - ஈரோடு மாவட்ட செய்திகள்

போலி பணி நியமன ஆணை வழங்கிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் துறை கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்தனர்.

ஆசிரியர் மீது புகார்
ஆசிரியர் மீது புகார்

By

Published : Sep 21, 2021, 7:08 PM IST

ஈரோடு: கௌத்துபாளையம் பகுதியைச் சேர்ந்தவர், ராஜசேகர். இவர் கள்ளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் கவுந்தப்பாடி, கோபி, பெருந்துறை உள்ளிட்டப் பகுதிகளில் உள்ள 40 நபர்களிடம் சத்துணவு அமைப்பாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறியுள்ளார். மேலும் அவர்களிடம் இதனைக்கூறி, ரூ.1 கோடி வரை பணம் பெற்று போலியான பணி நியமன ஆணைகளை வழங்கி உள்ளார்.

ஆசிரியர் மீது புகார்

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ராஜசேகரிடம் பணத்தை திரும்பக் கேட்டு உள்ளனர். ஆனால், ராஜசேகர் பணம் கொடுத்தவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் போலி பணி நியமன ஆணை வழங்கிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் துறை கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்தனர்.

இதையும் படிங்க:சென்னையில் 6 ஏடிஎம்களில் கொள்ளை முயற்சி: சுத்தியலுடன் சரணடைந்த இடைத்தரகர்

ABOUT THE AUTHOR

...view details