தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Audio Leak: கட்டட அனுமதி சான்றுக்கு லஞ்சம் கேட்கும் பஞ்சாயத்து அலுவலக ஊழியர்கள் - நல்லூர் ஊராட்சி

நல்லூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் கட்டட அனுமதி சான்றுகோரி, விண்ணப்பிக்கும் மக்களிடம் லஞ்சம் வாங்குவதாக, 7ஆவது வார்டு உறுப்பினர் புகார் தெரிவித்து, சில ஆடியோக்களை வெளியிட்டுள்ளார்.

viral audio  aiadmk panchayath president  complaint on panchayath president  bribe for granting permission to build house  panchayath president pa audio  president secretary audio  erode viral audio  வைரல் ஆடியோ  வீடு கட்ட அனுமதி வழங்க லஞ்சம்  அதிமுக ஊராட்சி தலைவர் மீது புகார்  ஊராட்சி செயலாளர் பேசும் ஆடியோ  ஊராட்சி தலைவரின் உதவியளர் ரமேஷின் ஆடியோ
வைரல் ஆடியோ

By

Published : Sep 11, 2022, 3:10 PM IST

ஈரோடு:நல்லூர் பஞ்சாயத்து பகுதியில், புதிதாக வீடு கட்டுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனைப்பயன்படுத்தி, பஞ்சாயத்து செயலாளர் மற்றும் அலுவலக ஊழியர்கள் கட்டட அனுமதிக்காக லஞ்சம் வாங்கி வருகின்றனர். பின்னர் ஊராட்சித்தலைவர் தான் லஞ்சம் வாங்க கூறுவதாகத் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் நல்லூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் கட்டட அனுமதி சான்றுகோரி விண்ணப்பிக்கும் மக்களிடம் லஞ்சம் வாங்குவதாக, 7ஆவது வார்டு உறுப்பினர் ஜனார்த்தனபிரபு, புகார் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து லஞ்சம் சேட்பது குறித்து இரண்டு ஆடியோக்களை வெளியிட்டுள்ளார்.

ஊராட்சி செயலாளர் மல்லிகாவின் ஆடியோ

முதலில் ஊராட்சி செயலாளர் மல்லிகாவிடம், வார்டு உறுப்பினர் ஜனார்த்தனபிரபு பேசும் ஆடியோவில், “கட்டட அனுமதிக்குப் பணம் தர வேண்டும்; அலுவலகச் செலவு உள்ளது. அதற்காகத்தான் வாங்குகிறோம். அரசு உத்தரவுப்படி எல்லாம் நாங்கள் வேலை செய்யமுடியாது. கட்டட அனுமதிக்கு வருபவர்களை எல்லாம் நீங்கள் பரிந்துரை செய்து அனுப்பினால் நாங்கள் எப்படி வேலை செய்வது. எதுவாக இருந்தாலும் தலைவரிடம் பேசிக்கொள்ளுங்கள்” என்றுள்ளார்.

இரண்டாவதாக உதவியாளர் ரமேஷ் ஜனார்த்தனபிரபுவிடம் பேசும் ஆடியோவில், “நான் கூடுதலாக பணம் வாங்கி பாக்கெட்டில் போடுவதில்லை. நிர்பந்திக்கப்படுவதால் பணம் வாங்குகிறேன். இது ஒரு அட்ஜெஸ்ட்மென்ட் தான். இது தொடர்பாக ஏதேனும் பேச வேண்டும் என்றால் தலைவரிடம் பேசிக்கொள்ளுங்கள்” என்றுள்ளார்.

ஊராட்சித்தலைவரின் உதவியாளர் ரமேஷின் ஆடியோ

இதையும் படிங்க: சீன கேமிங் ஆப் பணமோசடி: கொல்கத்தாவில் ரூ. 17 கோடி பறிமுதல் செய்த அமலாக்கத்துறை

ABOUT THE AUTHOR

...view details