ஈரோடு:விஜயமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் குமரேசன்-தீபிகா தம்பதி. இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். தீபிகாவுக்கு இன்று (ஜூலை 19) காலை தலைச்சுற்றல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தீபிகாவை அவரது தாயார் பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு உள்ள செவிலி உடனடியாக முதல் உதவியாக ஊசி மற்றும் குளுக்கோஸ் செலுத்தி அவருக்கு கரோனோ பரிசோதனை செய்தனர்.
பின்னர் தீபிகா மருத்துவரிடம் தனது அட்மிஷன் சீட்டை கொடுப்பதற்காக நின்றுள்ளார். அப்போது அங்கிருந்த தலைமை செவிலி ஒருவர் தீபிகாவிடம் எதற்காக என்னிடம் கை நீட்டி பேசுகிறாய், ஓங்கி அறைந்துவிடுவேன் என ஆவேசமாகத் திட்டியுள்ளார். உடனே இது குறித்து மருத்துவரிடம், தீபிகா தெரிவித்தபோது மருத்துவரும், தலைமை செவிலியருக்கே ஆதரவாகப் பேசியுள்ளார்.
பெருந்துறை அரசு மருத்துவமனை இதனால் பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் செவிலி ஒருவர் இதுபோன்று நடந்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:வாடகை கேட்டு நிர்பந்திக்கும் நகராட்சி: கடைகளை அடைத்த வியாபாரிகள்