ஈரோடு:சத்தியமங்கலம் ராஜீவ்நகரைச் சேர்ந்தவர் முபாரக் அலி. இவர் ஆன்லைன் மூலம் கடன் பெற்றுத் தருவதாக விளம்பரம் செய்திருந்தார். அதன்படி வாணிப்புத்தூரைச் சேர்ந்த மயில்சாமி உள்ளிட்ட 10 பேர் முபாரக் அலியைச் சந்தித்து கடன் பெற்றுத் தருமாறு கேட்டனர்.
இதையடுத்து அவர்களிடமிருந்து ஆதார், செல்போன் எண், வருமானவரி கணக்கு எண் உள்ளிட்ட ஆவணங்களைப் பெற்றுக்கொண்டு கடன் பெற்றுத் தருவதாகக் கூறினார். அதன்படி சில நாள்களில் 50 ஆயிரம் ரூபாய் கடன் வழங்குவதற்கு ஏடிஎம் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகியவை அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டன.