ஈரோடு:ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரமோற்சவம் விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. நவராத்திரியின் 9 நாட்களும் வெங்கடாசலபதிக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட மலர்களால் அலங்காரம் செய்யப்படும். அந்த வகையில் இந்தாண்டு ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே ஒத்தகுதிரையில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரி சார்பில் சுமார் 10 டன் மலர் மாலை வழங்க திருப்பதி தேவஸ்தானத்துக்கு அனுப்பப்பட உள்ளது. முன்னதாக சத்தியமங்கலம், பெருந்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து 10 டன் செவ்வந்தி பூக்கள் வாங்கப்பட்டன.
திருப்பதி ஏழுமலையானுக்கு 10 டன் பூக்களின் மாலை... ஈரோட்டில் கல்லூரி மாணவர்கள் கோர்ப்பு... - வெங்கடாசலபதி சாமி
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவ விழாவிற்கு கோபிசெட்டிபாளையத்தில் இருந்து 10 டன் மலர்களாலான மாலை அனுப்பி வைக்கப்பட உள்ளது.
http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/26-September-2022/16477318_erd.mp4
அந்தப் பூக்களை கல்லூரி வளாகத்திலேயே மாணவ, மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோர் மாலையாக தொடுத்து வருகின்றனர். ஒவ்வொரு மாலையும் பத்தடி நீளத்திற்கு உருவாக்கப்பட்டு பிரமோற்சவ நிகழ்ச்சியில் போது அலங்கரிக்க அனுப்பப்பட உள்ளது.
இதையும் படிங்க: விடுமுறை என்பதால் பண்ணாரி அம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்