ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள லக்கம்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட ஈஸ்வரமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் செந்தில். இவர் அதேப் பகுதியில் புதியதாக வீடு கட்டிவருகிறார். இதற்கு மின் இணைப்பு அமைக்கும் பணியை சின்னமொடச்சூர் பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரிசன் பாபுவிடம் கொடுத்துள்ளார். அவரும் மின் இணைப்பு பணியை மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில் நேற்று பணி உதவிக்காக கோபி நாயக்கன்காடு பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவரான பாஸ்கர் என்பவரை சேர்த்துக் கொண்டு வேலைப்பார்த்துள்ளார். பணியின் போது புதியதாக கொடுக்கப்பட்டுள்ள மின் இணைப்பு பெட்டியில் பியூஸ் போட பாஸ்கர் சென்ற போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயேஅவர் உயிரிழந்தார்.