தமிழ்நாடு

tamil nadu

குடிமராமத்துப் பணிகளை நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே நடைபெற்று வரும் குடிமராமத்துப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கதிரவன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

By

Published : Jul 31, 2019, 2:22 AM IST

Published : Jul 31, 2019, 2:22 AM IST

ETV Bharat / state

குடிமராமத்துப் பணிகளை நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!

மாவட்ட ஆட்சியர்

ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர் அணைக்கோட்டம் கட்டுப்பாட்டில் உள்ள பாசன கால்வாய்கள் மற்றும் ஏரிகள் புனரமைப்பு செய்யும் பொருட்டு ரூ.450 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் கோபிசெட்டிபாளையத்தின் கட்டுப்பாட்டில் தடப்பள்ளி அரக்கன்கோட்டை 8 கால்வாய் பணிகளும், பவானி உட்கோட்டத்தில் உள்ள 8 நீர் நிலைகளிலும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானி ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் தடப்பள்ளி அரக்கன்கோட்டை கால்வாய்கள் மற்றும் கிளை கால்வாய்கள் ஏரிகள் வரட்டுப்பள்ளம் அணை கிளைவாய்கால்களில் 64 கிலோமீட்டர் நீளத்திற்கு முட்புதர்கள் அகற்றுதல் தூர்வாருதல் மற்றும் கரைகளை பலப்படுத்தும் பணிகள் சிதிலமடைந்த 30 மதகுகள் புதிதாக கட்டுமானம் செய்தல் 730 மீட்டர் நீளத்திற்கு வாய்காலின் உட்பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர்

பாசன வாய்க்கால்கள் கடைகோடி வரை தண்ணீர் செல்வதற்கும் ஏரிகளின் முழு கொள்ளவு வரை நீர் நிரம்புவதற்கு ஏதுவாகவும் 4248.29 ஹெக்டேர் நிலங்கள் நீர் பாசன வசதி பெறும் வகையில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேபோல் ஓடத்துறையில் உள்ள ஏரியில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் 270 மீட்டர் நீளத்திற்கு பாசன வாய்காலில் கான்கிரீட் சுவருடன் கூடிய வாய்காலாக மாற்றம் செய்ய பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏரியின் இருகரைகளிலும் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரம் மற்றும் முட்புதர்களை அகற்றி கரைகளை பலப்படுத்தும் பணியை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோனை மேற்கொண்டார்.

ABOUT THE AUTHOR

...view details