ஈரோடு: கரோனா சிறப்பு மருத்துவமனையாக செயல்படும், பெருந்துறை அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையை, புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி, நேற்று (ஜூன் 17) ஆய்வு மேற்கொண்டார்.
பின் பாதுகாப்பு கவச உடை அணிந்து கரோனா தீவிர சிகிச்சை பிரிவிற்கு சென்று, கரோனா நோயாளிகளை சந்தித்தார். அப்போது சிகிச்சை முறை, உணவு வசதி, உடல் நலன் குறித்து நோயாளிகளிடம் கேட்டறிந்தார். மேலும் மாதிரிகளை பரிசோதனை செய்யும் ஆய்வகத்திலும் ஆய்வு நடத்தினார்.
கவச உடையணிந்து நோயாளிகளை சந்தித்த ஆட்சியர் இதனைத்தொடர்ந்து, ரோட்டரி சங்கம் சார்பில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 400 படுக்கைகள் கொண்ட கட்டடப்பணிகளையும், மருத்துவ பயன்பாட்டிலுள்ள ஆக்ஸிஜன் கலன்களையும் பார்வையிட்டார்.
இதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டலினை காணொலி மூலம் சந்தித்த மாவட்ட ஆட்சியர், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார்.
இதையும் படிங்க:டெல்லியில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அளித்த பதில்!