தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா தடுப்பு பணிகள் குறித்து ஈரோடு ஆட்சியர் திடீர் ஆய்வு - ஈரோடு மாவட்ட ஆட்சியர்

ஈரோடு: கோபிச்செட்டிப்பாளையம் அருகே கரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆட்சியர் நிர்மல் ராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆட்சியர் திடீர் ஆய்வு!
கரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆட்சியர் திடீர் ஆய்வு!

By

Published : Jun 2, 2021, 10:30 PM IST

ஈரோடு மாவட்டத்தில் கரோனாவைக் கட்டுப்படுத்தும் விதமாக அரசு சார்பில் கூடுதலாக சிறப்பு அலுவலராக ஆட்சியர் நிர்மல் ராஜ் நியமிக்கப்பட்டார். இவர், இன்று மே (ஜூன்.02) கோபிச்செட்டிப்பாளையம் பகுதியில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது வாய்க்கால்ரோடு, காளியண்ணகவுண்டர் எக்ஸ்டன்ஷன், கிருஷ்ணா நகர், எல்.ஐ.சி காலனி, ஸ்ரீ ராமபுரம் ஆகிய பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அவர், பொதுமக்களுக்கு குடிநீர் தினந்தோறும் வழங்கப்படுகிறதா என்பது குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து தினமும் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க ஆணையிட்ட நிர்மல் ராஜ், வீதிகளில் தண்ணீர் பிடிக்க கூட்டம் கூட்டமாக வராமல் தகுந்த இடைவெளி விட்டும், முகக்கவசம் அணிந்தும் வர வேண்டி வலியுறுத்தினார்.

மேலும் கரோனா அறிகுறி குறித்து வீடுகளில் ஆய்வு நடத்தி வரும் பணியாளர்களிடம் பொதுமக்கள் பற்றிக் கேட்டறிந்தார். பின்னர் வருவாய்த் துறை மற்றும் நகராட்சி அலுவலர்களிடம் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

தொடர்ந்து, காய்ச்சல் உள்ளவர்கள் தாமாக முன்வந்து பரிசோதனை செய்துகொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

ABOUT THE AUTHOR

...view details