தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பவானிசாகர் அணை நிரம்புவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! - தென்மேற்குப் பருவமழை

ஈரோடு: தென்மேற்குப் பருவமழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை நிரம்பி வருவதால், கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Coastal flood warning issued for Bhavani Sagar dam
Coastal flood warning issued for Bhavani Sagar dam

By

Published : Aug 10, 2020, 9:32 PM IST

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையின் மொத்த கொள்ளளவு 105 அடியாகவும், நீர் இருப்பு 32.8-டிஎம்சியாகவும் உள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக, அணைக்கு நீர்வரத்து 40 ஆயிரம் கன அடி வரை உயர்ந்து, கடந்த ஆகஸ்ட் 3 ஆம் தேதி 85 அடியாக இருந்த அணையின் நீர் மட்டம், படிப்படியாக உயர்ந்து இன்று (ஆகஸ்ட் 10) 100.50 அடியை எட்டியுள்ளது.

தென்மேற்குப் பருவமழை காலங்களில், பவானிசாகர் அணையின் நீர்மட்டத்தை, 102 அடிக்கு மேல் தேக்க இயலாது என்ற தேசிய நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ், நாளை (ஆகஸ்ட் 11) அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியும் அணையின் மதகுகள் திறக்கப்படவுள்ளன. இதன் காரணமாக அணைக்கு வரும் உபரி நீர் முழுவதும், பவானி ஆற்றில் திறந்து விடப்படும்.

இதனால் பவானிசாகர், சத்தியமங்கலம், கொடிவேரி பகுதியில், தாழ்வான இடத்தில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

48 மணி நேரத்தில் அணை நிரம்ப வாய்ப்பு உள்ளதால், பொதுமக்கள் ஆற்றில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்படுவோர், ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாமில் தங்க வைக்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details