ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் கரோனா நோய்த் தொற்று நிவாரண சிறு வணிகக்கடன் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
கோபிசெட்டிபாளையம் தொகுதிக்குட்பட்ட 261 பயனாளிகளுக்கு சிறு வணிகக்கடன், வீட்டு அடமானக் கடன் மற்றும் பயிர்க் கடன் என 87 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கடனுதவி காசோலைகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் ஆகியோர் வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "கூட்டுறவு சங்கத்தின் மூலம் பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. முதலமைச்சர் பழனிசாமி தமிழ்நாட்டில் வரலாறு படைக்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், இந்திய நாட்டின் வரலாற்றின் சுதந்திரம் பெற்ற பிறகு 60 ஆண்டுகால திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நமது பகுதியில் ஆடு மாடுகள் வாங்க கடன் வாங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது" என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க:'ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம்: உயர் நீதிமன்ற உத்தரவை அரசு அமல்படுத்தும்!'