சீனாவில் தொடங்கி இன்று உலகம் முழுவதும் பெரும் உயிர் சேதத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி வரும் கரோனா வைரசால், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவில், மத்தியப் பிரதேசத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லூரி, சுற்றுலா தலங்கள், கோயில்கள், வணிக நிறுவனங்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மூடப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோபி பகுதியில் உள்ள நகை கடைகள், ஜவுளி நிறுவனங்கள், சூப்பர் மார்க்கெட் போன்ற கடைகளை மூட வருவாய்த்துறை சார்பில் இன்று மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.