தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புகாரின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி செல்போன் டவரில் ஏறி போராட்டம் - செல்போன் டவரில் ஏறி போராட்டம்

ஈரோடு: பக்கத்து வீட்டுக்காரர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி செல்போன் டவரில் ஏறிய நபரை நான்கு மணி நேர போராட்டத்திற்குப் பின் தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

Tower
Tower

By

Published : Nov 16, 2020, 5:25 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த சதுமுகை பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி திலகவதி. இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் எனக் குழந்தைகள் உள்ளனர். இவருக்கும் பக்கத்து வீட்டுக்காரர் கேபிள் நடத்தும் நபருக்கும் இடையே நீண்ட நாள்களாகப் பிரச்சினை நடந்துவந்தது.

இது குறித்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சரவணன் காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஆனால் காவல் துறையினர் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.

இதனையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சரணவன் தனது வீட்டின் அருகே உள்ள கரும்புத் தோட்டத்தில் அமைந்திருக்கும் 130 அடி உயரமுள்ள செல்போன் டவர் மீது ஏறி அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

செல்போன் டவரில் ஏறி போராட்டம்

இதை அறிந்த அங்கு வந்த பொதுமக்கள் அவரை சமாதானப்படுத்தி கீழே இறக்க முயற்சித்தனர். ஆனால் சரவணன் இறங்காததால் மக்கள் காவல் துறை, தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.

இந்தத் தகவலின் அடிப்படையில் அங்கு வந்த காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் அவரை சமாதானப்படுத்தினர். பின் காவல் துறையினரும் கேபிள் டிவிகாரர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். சுமார் 4 மணிநேர போராட்டத்திற்குப் பின் தீயணைப்பு வீரர்கள் சரவணனை செல்போன் டவரில் ஏறி மீட்டனர்.

நீண்ட நேரமாக மேலே இருந்ததால் சோர்வடைந்த சரவணனை கயிறு மூலம் கட்டி மெதுவாக இறக்கி கீழே கொண்டு வந்தனர். அதன்பின் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details