தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏலச்சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி - பாதிக்கப்பட்டவர்கள் புகார்! - ஏலச்சீட்டில் ஏமாற்றியவர் தலைமறைவு

ஈரோடு: பாசூர் அருகே ஏலச்சீட்டு நடத்தி 2 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு தலைமறைவான நபரை கைது செய்யக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் காவல் துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.

ஏலச்சீட்டில் பாதிக்கப்பட்டவர்கள்

By

Published : Aug 26, 2019, 10:59 PM IST

ஈரோடு மாவட்டம், பாசூரைச் சேர்ந்தவர் நடராஜன். இவர் 1 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி வந்ததாகத் தெரிகிறது.

ஏழு ஆண்டுகளாக முறையாகச் சீட்டு நடத்தியதால் நம்பிக்கையின் பேரில் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த, நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒவ்வொரு மாதமும் 5 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை பணம் கொடுத்து வந்துள்ளனர்.

ஏலச்சீட்டில் மோசடி - பாதிக்கப்பட்டவர்கள் புகார்!

இந்நிலையில், இந்த ஆண்டு ஏலச்சீட்டு முதிர்வு தேதி முடிந்து பல மாதங்களாகியும் பணத்தை தராமல் இழுத்தடித்த நடராஜன், கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக தலைமறைவாகியுள்ளார்.

இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரைச் சந்தித்து மனு அளித்தனர். புகார் அளிக்க வந்த 20 பேர், தங்களிடம் 50 லட்சம் ரூபாயும், தங்களை போல் நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் 2 கோடி ரூபாய் அளவிற்கு நடராஜன் மோசடி செய்து ஏமாற்றி விட்டதாகவும் கூறியுள்ளனர். தலைமறைவான நடராஜனைக் கண்டுபிடித்து பணத்தை மீட்டுத்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details