ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அக்ரஹார வீதியில் அமைந்துள்ள நந்தகோகுலம் கோசாலையில் ஒவ்வொரு வருடமும் கிருஷ்ணஜெயந்தி விழா மிக விமர்சியாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இந்தாண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா ஆகஸ்ட் 21ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆகஸ்ட் 22ஆம் தேதி கிருஷ்ண பஜனாம்ருதம் இசை இசைக்கப்பட்டு, கிருஷ்ண லீலாம்ருத நாட்டியம் நடைபெற்றது. பின்னர், ஆகஸ்ட் 23ஆம் தேதி கிருஷ்ண கீர்த்தன பஜனை பாடியும், குழலிசை இசைத்தும் விழா நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து மாலை 108 குழந்தைகள் கிருஷ்ணா, ராதை ஊள்ளிட்ட வேடங்கள் அணிந்து மங்கள வாத்யங்கள், நாம சங்கீர்த்தனம், கோலாட்டம், நடனம், வானவேடிக்கையுடன் ஊர்வலமாகச் சென்றனர். இந்த ஊர்வலம் நந்தகோகுலம் கோசாலையில் தொடங்கி அக்கரஹார வீதி, ஈஸ்வரன்கோயில் வீதி, பெருமாள்கோயில் வீதி, யாகூப் வீதி, தேர் வீதி வழியாக சென்று மீண்டும் நந்தகோகுலத்தில் நிறைவடைந்தது.