ஈரோடு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி அண்ணாநகரில் 1995ஆம் ஆண்டு முதல் ஷீபா குழந்தைகள் காப்பகம் செயல்பட்டுவந்தது. இதில் 18 ஆதரவற்ற குழந்தைகள் தங்கி கல்வி பயின்றுவந்தனர். இந்த காப்பகத்தில் தரமில்லாத உணவு, திறந்தவெளியில் படுக்கை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் குழந்தைகள் பாதிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.
அடிப்படை வசதிகள் இல்லாததால் மூடப்பட்ட குழந்தைகள் காப்பகம்! - Child home sealed
ஈரோடு: அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் புன்செய் புளியம்பட்டியில் செயல்பட்டுவந்த தனியார் குழந்தைகள் காப்பகத்தை மூடுவதற்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்பேரில் மாவட்ட ஆட்சியர் காப்பகம் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் கவிதா, குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழு அசோக் ஆகியோர் அந்த காப்பகத்தை ஆய்வு செய்தனர். அப்போது அங்கு தங்கும் அறை, கழிவறை, உணவு ஆகியவை தரமின்றி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து காப்பகத்தை மூட குழந்தைகள் நல அலுவலர் கவிதா உத்தரவிட்டார். இதையடுத்து காப்பகத்தில் தங்கியிருந்த 18 குழந்தைகளை மீட்டு ஈரோடு கொள்ளிக்காட்டு அரசு காப்பகத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் குழந்தைகள் இல்லம் சீல் வைத்து மூடப்பட்டது.