முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜனவரி 6, 7 ஆகிய தேதிகளில் ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதையொட்டி முதலமைச்சர் வரும் சாலைகள், மக்கள் மத்தியில் பேசும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு வருகிறார் முதலமைச்சர்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு - ஈரோடு மாவட்ட செய்திகள்
ஈரோடு: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஈரோடு வருவதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு
குறிப்பாக, சத்தியமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து போக்குவரத்து மாற்றம் செய்வது குறித்து சத்தியமங்கலம் டிஎஸ்பி சுப்பையாவிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது சத்தியமங்கலம், புஞ்சை புளியம்பட்டி ஆகிய காவல் நிலையங்களைச் சேர்ந்த காவலர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் கரோனா தடுப்பூசி ஒத்திகை - முதலமைச்சர் ஆய்வு