நாட்டின் 71ஆவது குடியரசு தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வந்தது. மேலும் ஈரோட்டில் முன்னாள் படைவீரர் நலனுக்காக சிறப்பாக கொடிநாள் நிதி வசூல் செய்த அதிகாரிக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட சான்றிதழில் கொடிநாள் என்பதற்குப் பதிலாக "பொடி நாள்" வசூல் சாதனை எனப் பாராட்டு சான்றிதழில், தவறுதலாக அச்சடிக்கப்பட்டிருந்தது சலசலப்பை ஏற்படுத்தியது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு "பொடி நாள்" சாதனை விருது! - erode chief educational officer balamurali
ஈரோடு: குடியரசு தின விழாவில் கொடிநாள் நிதி வசூலித்த, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு வழங்கிய பாராட்டுச் சான்றிதழில் "பொடி நாள்" என்று அச்சிடப்பட்டு இருந்ததைக் கண்ட அதிகாரி அதிர்ச்சி அடைந்தார்.
![மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு "பொடி நாள்" சாதனை விருது! ஈரோடு மாவட்ட குடியரசு தின விழா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5854393-thumbnail-3x2-podi.jpg)
ஈரோடு மாவட்ட குடியரசு தின விழா
வ.உ.சி பூங்காவில் நடைபெற்ற இவ்விழாவில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன், அம்மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர் பாலமுரளிக்கு இந்தச் சான்றிதழை வழங்கினார். மேலும் அதில் கொடிநாள் வசூல் என்பதற்குப் பதிலாக "பொடிநாள்" என இருந்திருக்கிறது. ஆட்சியரும் இதனைக் கவனிக்காமல் பொடிநாள் வசூல் சான்றிதழை வழங்கினார்.
ஈரோடு மாவட்ட குடியரசு தின விழா
இதையும் படிங்க:மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கருஞ்சிறுத்தை நடமாட்டம்