சென்னை ஃபார்முலா 4 கார் பந்தையம் குறித்து கள் நல்லசாமி விமர்சனம் ஈரோடு: தமிழ்நாடு கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், " கொடிவேரி பாசனத்திற்கு, மொத்தம் திறக்கப்பட வேண்டிய 4.62 டிஎம்சிக்கு பதில் 16.5 டிஎம்சி திறக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
முதல் போகத்திற்கு 4.4 டிஎம்சி திறக்க வேண்டிய நிலையில், 8.8 டிஎம்சி திறக்கப்பட்டுள்ளது. இரண்டாம் போகத்திற்கு தடப்பள்ளி அரக்கன்கோட்டை இரண்டாம் பாசனத்திற்கு 0.17 டிஎம்சிக்கு பதிலாக 7.7 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இது காவிரி தீர்ப்பை மதிக்காத செயலே ஆகும்.
கீழ்பவானி கால்வாயில் மூலம் 1.03 ஏக்கர் நிலத்திற்குத் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக முறைநீர் பாசனம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தற்போது அணையில் 14 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ள நிலையில், இரண்டாம் போகத்திற்கு கூடுதலாகத் தண்ணீர் திறப்பது காவிரி தீர்ப்பிற்கு எதிரானது.
இதற்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளிக்க வேண்டும். பதில் சொல்ல வில்லையெனில் அவர் அந்த பொறுப்பில் இருந்து விலகுவது நல்லது. மேலும் இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை அணுக உள்ளோம் மற்றும் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தி காவிரி தீர்ப்பை அமல்படுத்தும் வழிமுறைகளை ஏற்படுத்துவோம்.
இனி வரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடக்காது என நீர்வளத்துறை உத்தரவாதம் அளிக்கத் தவறும் பட்சத்தில், வரும் 2024ஆம் தேர்தலில் பாசனம் பெறும் நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய நான்கு பாராளுமன்றத் தொகுதிகளில் திமுக மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி வாய்ப்பை இழப்பார்கள் மற்றும் கட்டாயம் தோற்கடிக்கப்படுவார்கள்" என்று பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாடு சட்டப் பேரவையில், சட்டமன்ற உறுப்பினர் அனுமதி அளிக்க வேண்டும் என்றும், கள் கடைகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கிறார். அதேபோல் சில அரசியல் கட்சித் தலைவர்கள் இதே போன்ற கருத்துகளை மேடையில் பேசுகின்றனர். இவை அனைத்தும், அவர்களுக்குக் கள் பற்றிய புரிதல் இல்லாத வெளிப்பாடே ஆகும்.
கலப்படத்தைக் காரணம் காட்டி அநியாயமாக, அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கிய உரிமையை பறித்துக் கொண்டது. கள் விற்பனைக்கு அனுமதி இருக்கும் அண்டை மாநிலங்களில், கலப்படத்தை அம்மாநில அரசுகள் கலப்படத்தைத் தடுக்கின்றன. அதைச் செய்ய முடியாத தமிழக அரசால் செய்ய முடியாதா" என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் பேசிய அவர், "ஏற்கனவே தமிழக அரசு கடன் சுமையில் உள்ள நிலையில், சென்னையில் 42 கோடி ரூபாய் செலவில் கார் பந்தயத்தை நடத்தவேண்டிய அவசியமே இல்லை. ஏற்கனவே இருந்த சாலைகள், நடைபாதைகளை தகர்த்து மழைபெய்வதால் அவசர கதியில் சாலையை அமைத்து கொண்டு இருக்கின்றார்கள். அதற்காக செலவு செய்யப்படும் 42 கோடியும் வீணடிக்கப்படுகின்றது.
இதையும் படிங்க:மிசோரம் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை! ஆட்சி யாருக்கு?