தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 30, 2020, 10:40 PM IST

ETV Bharat / state

தாளவாடி அருகே விவசாயிகளைத் தாக்கிய சிறுத்தை!

ஈரோடு: தாளவாடி அடுத்த அருள்வாடியில் விவசாயி ஒருவரைச் சிறுத்தை தாக்கிய சம்பவம், அப்பகுதி கிராமங்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

cheetah
cheetah

தாளவாடி புலிகள் காப்பகம் அருகேயுள்ள அருள்வாடியைச் சேர்ந்த விவசாயி ராஜு (30). இவரது தோட்டம் வனத்தையொட்டி நாகேஸ்வரா கோயில் அருகே உள்ளது. இவர் மானாவாரி விவசாயம் செய்து வருகிறார்.

இந்நிலையில், ராஜூ இன்று வழக்கம்போல் தோட்டத்தில் உழவு ஓட்டிவிட்டு, மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது, வனத்திலிருந்து சிறுத்தை ஒன்று வெளியே வருவதைக் கண்டு மாடுகள் மிரட்சியுடன் சிதறி ஓடின.

ராஜு ஓட்டம் பிடித்தார். அதற்குள் பாய்ந்த சிறுத்தை விவசாயியைத் தாக்கியது. இதனிடையே, சிறுத்தையுடன் ராஜு போராடுவதைக் கண்ட சக விவசாயிகள் சத்தம் போட்டு நிகழ்விடத்துக்கு விரைந்தனர். இதில், பயந்துபோன சிறுத்தை, அவரை விடுவித்தது. காட்டுக்குள் ஓடி மறைந்தது.

பின்னர், காயமடைந்த ராஜுவை விவசாயிகள் மீட்டு, தாளவாடி அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்த்தனர்.

ஆடு,மாடுகளை வேட்டையாடிய சிறுத்தை, தற்போது ஆட்கொல்லி சிறுத்தையாக மாறியுள்ளது எனவும், சிறுத்தை மனிதர்களைத் தாக்க முற்படும்போது அதனைச் சுட்டுக் கொல்ல வேண்டும் எனவும் விவசாயிகள் வனத் துறையினருக்குக் கோரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க : 1984 சீக்கிய கலவரம்: ஆயுள் தண்டனை கைதிக்கு பிணை மறுப்பு

ABOUT THE AUTHOR

...view details