ஈரோடு மாவட்டத்தின் பேருந்துநிலைய வளாகத்தில் ஆதரவற்ற பலர் வசிக்கின்றனர். இவர்கள் அவ்வழியில் வருவோர் தரும் உணவு, தண்ணீர், மற்றும் கோயில்களில் வழங்கப்படும் அன்னதானம் ஆகியவற்றால் பசியாறி வந்தனர். தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஒரு வேளை உணவுக்காக இவர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பசித்தால் எடுத்துக்கொள்ளுங்கள்: ஆதரவற்றவர்களுக்கு உணவளிக்கும் தொண்டு நிறுவனம்! - தொண்டு நிறுவனம்
ஈரோடு: முழு ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் பலருக்கு, ரீடூ சேவை என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் இலவசமாக உணவு வழங்கி வருகிறது.
ஊரடங்கில் உணவளிக்கும் தொண்டு நிறுவனம்!
இந்நிலையில் 'ரீடூ சேவை நிறுவனம்' என்ற தன்னார்வ அமைப்பைச் சேர்ந்தவர்கள் தினமும், பேருந்து நிலைய வளாகத்தில் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். இந்த அமைப்பினர் தள்ளு வண்டியில் உணவு பொட்டலங்களை வைத்துவிட்டு, அதனருகே, ’பசித்தால் எடுத்துக் கொள்ளுங்கள், பணம் வேண்டாம்’ என்ற பதாகையை வைத்துள்ளனர். அந்த பதாகையில் இதுபோல உதவியில் இணைந்து கொள்ள தொலைபேசி எண்ணையும் இணைத்துள்ளனர்.
இதையும் படிங்க:கரோனா கட்டளை மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு