ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் செம்மலர் நெசவாளர் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் 137 நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இச்சங்கத்திற்கு தலைவர், துணைத்தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு நிர்வாகிகளை தேர்வு செய்ய ஏழு பேர் நிர்வாகக் குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட வேண்டும். இதற்காக இரண்டு பெண்கள் உள்பட மூன்று பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, மீதமுள்ள நான்கு நிர்வாகக் குழு உறுப்பினர் பதவிக்கு சுப்பிரமணி, ஈஸ்வரமூர்த்தி, சாமியப்பன், ரமணி, சவுந்தராஜன் ஆகியோர் போட்டியிட்டனர்.
தோல்வி அடைந்தவருக்கு வெற்றிச் சான்றிதழ் - குழப்பத்தில் கூட்டுறவு சங்கம் - கூட்டுறவு சங்கத் தேர்தல்
ஈரோடு: சென்னிமலையில் கூட்டுறவு சங்கத் தேர்தலில் தோல்வியடைந்தவருக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
கூட்டுறவு சங்கம்
இதற்கான தேர்தல் கடந்த 8ஆம் தேதி தேர்தல் அலுவலர் செல்வம் முன்னிலையில் நடைபெற்றது. இதில் 127 உறுப்பினர்கள் வாக்களித்தனர். பின்னர் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் சாமியப்பன் என்பவர் 22 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். இந்நிலையில் தேர்தலில் போட்டியிட்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. அப்போது தோல்வியடைந்த சாமியப்பனுக்கு தேர்தல் அலுவலர் செல்வம் தவறுதலாக வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கியுள்ளார். இந்த சம்பவம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.