தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Erode By Election: ஈரோடு வந்துசேர்ந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் - Erode news today

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலையொட்டி பாதுகாப்பு பணிகளுக்காக மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் வந்தடைந்தனர்.

Erode By Election: ஈரோடு வந்து சேர்ந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை
Erode By Election: ஈரோடு வந்து சேர்ந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை

By

Published : Feb 11, 2023, 3:22 PM IST

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பாதுகாப்பு பணிகளுக்காக துணை ராணுவப் படையும் வரவழைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு வந்து சேர்ந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை

அந்த வகையில், மத்திய தொழில் பாதுகாப்பு படை, இந்தோ- திபெத்தியன் பாதுகாப்பு படை, ரயில்வே பாதுகாப்பு படை என்று துணை ராணுவத்தின் மூன்று பிரிகளை சேர்ந்தவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதில், இன்று(பிப்.11) மத்திய தொழில் பாதுகாப்பு படை பிரிவை சேர்ந்த ஒரு கம்பெனி வீரர்களும், ரயில்வே பாதுகாப்பு படை பிரிவைச் சேர்ந்த ஒரு கம்பெனி வீரர்களும் ஈரோடு மாவட்டத்துக்கு ரயில் மூலம் வந்தடைந்தனர்.

இவர்கள் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கின்றனர். ஏற்கனவே துணை ராணுவபடையை சேர்ந்த ஒரு கம்பெனி போலீசார் ஈரோடு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் 32 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்த இடங்களில் துணை ராணுவ படையை ஈடுபடுத்தவும் தேர்தல் அதிகாரிகள் திட்டமிட்டு இருக்கின்றனர். அதோடு இன்று மாலை அக்ரஹாரம் பகுதியில் துணை ராணுவப் படையினரை கொண்டு கொடி அணிவகுப்பு நடத்தப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:குடியரசு தின விழா அணிவகுப்பில் சிறப்பாக செயல்பட்ட படைப்பிரிவினருக்கு கேடயங்கள் வழங்கிய ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details