ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் கீழ்பவானி முறை நீர்ப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் மதிமுக எம்.பி கணேசமூர்த்திக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மத்திய அரசு திட்டங்களை எதிர்க்க உணர்வுள்ள இளைஞர்களை உருவாக்க வேண்டும் - Central government
ஈரோடு: தமிழ்நாட்டின் அனைத்து வாழ்வாதாரங்களையும் பாதிக்கும் மத்திய அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஈடு கொடுக்கும் வகையில், உணர்வுள்ள இளைஞர்களை உருவாக்க வேண்டும் என மதிமுக எம். பி. கணேசமூர்த்தி கூறியுள்ளார்.
இதில் கலந்துகொண்ட அவர் மரக்கன்றுகளை நட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ’நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையில் அமைந்த மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராக ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதற்கு பாராட்டு தெரிவித்தவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டின் அனைத்து வாழ்வாதாரங்களையும் பாதிக்கும் மத்திய அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஈடு கொடுக்கும் வகையில் உணர்வுள்ள இளைஞர்களை உருவாக்க வேண்டும். அவர்களை வைத்து மத்திய அரசின் திட்டங்களான ஹைட்ரோகார்பன், நியூட்டிரினோ திட்டம் உயர் மின்கோபுரங்கள் போன்ற திட்டங்களை தடுக்க வேண்டும் என்றார்.