ஈரோடு: கரூரில் இருந்து தாளவாடிக்கு நேற்று (ஜூலை 17) சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி மூட்டைகளை இறக்கிவிட்டு மீண்டும் கரூர் திரும்பி கொண்டிருந்தது. லாரியை சக்திவேல் என்பவர் ஓட்டினார். மற்றொரு ஓட்டுநர் சுரேஷ் உடனிருந்தார்.
கும்டாபுரம் என்ற இடத்தில் சென்ற லாரி, நிலைதடுமாறி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரி முகப்பின் ஒரு பகுதி சேதமடைந்தது. விபத்தில் ஓட்டுநர் சக்கிவேல் காயமடைந்தார்.