ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருபவர் சரண்(37). இவர், இன்று (நவம்பர் 11) பணியில் இருந்த போது, அடையாளம் தெரியாத ஒருவர் அலுவலகத்துக்குள் வந்து சரணிடம் ரசீது புத்தகத்தை காட்டி நன்கொடை கேட்டுள்ளார். அப்போது சரண் தனது ஆண்ட்ராய்டு செல்போனை மேஜை மீது வைத்துவிட்டு வெளியே சென்றார்.
புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் ஊழியரின் செல்போன் திருட்டு...! சிசிடிவி காட்சி வெளியீடு - புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி அலுவலகம்
ஈரோடு: புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் நன்கொடை வசூலிக்க வந்த ஒருவர், அலுவலக ஊழியரின் செல்போன் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
இதை கவனித்த நன்கொடை வசூலிக்க வந்த நபர், சாதூரியமாக செல்போனை திருடி தான் கொண்டுவந்த காகிதத்தின் அடியில் மறைத்து வைத்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டார். இதையடுத்து, தனது செல்போன் காணாமல் போனதைக் கண்டு சரண் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்த சிசிடிவி பதிவில் பார்த்தபோது, நன்கொடை வசூலிக்க வந்தவர் செல்போனை எடுத்துச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.
இதையடுத்து, தனது செல்போனை கண்டுபிடித்து தருமாறு புஞ்சைபுளியம்பட்டி காவல் நிலையத்தில் சரண் புகார் அளித்துள்ளார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.