தமிழ்நாடு

tamil nadu

சிசிடிவி: மின் கம்பத்தை தும்பிக்கையால் சேதப்படுத்திய காட்டு யானை

By

Published : Jan 29, 2023, 12:02 PM IST

ஈரோட்டில் மின் கம்பத்தை காட்டு யானை தும்பிக்கையால் சேதப்படுத்தும் சிசிடிவி வீடியோ வெளியாகியது.

மின் கம்பத்தை தும்பிக்கையால் சேதப்படுத்திய காட்டு யானை
மின் கம்பத்தை தும்பிக்கையால் சேதப்படுத்திய காட்டு யானை

சிசிடிவி வீடியோ

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் வனப்பகுதிகளில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் உள்ளன. அதில் காட்டு யானைகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவது வாடிக்கையாகிவிட்டது. அந்த வகையில் தாளவாடி மலைப்பகுதியில் இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் கிராமங்களில் விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதம் செய்து வருவது தொடர் கதையாக உள்ளது.

அந்த வகையில் நேற்றிரவு கரளவாடி கிராமம் அருகே உள்ள ஜோரக்காடு ரங்கசாமி கோயில் பகுதியில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை அப்பகுதியில் உள்ள மின்கம்பத்தை தனது தும்பிக்கையால் தள்ளி முறித்து சேதப்படுத்தியது. யானை ஆக்ரோசத்துடன் மின் கம்பத்தை உடைத்து சேதப்படுத்தும் காட்சி அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால் வனத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: வெளியானது "தக்ஸ்" படத்தின் டிரெய்லர்

ABOUT THE AUTHOR

...view details