ஈரோடு:கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காசிபாளையம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இதில் 12 பேர் திமுக சார்பிலும், 2 பேர் அதிமுக சார்பிலும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒருவரும் வெற்றி பெற்றுள்ளனர். 12-ஆவது வார்டு கவுன்சிலராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கோதண்டன் உள்ளார்.
இந்நிலையில் கடந்த 31-ஆம் தேதி பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் மாதாந்திர கூட்டம், பேரூராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி வெற்றிவேல் மற்றும் செயல் அலுவலர் ஜனார்த்தனன் தலைமையில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் கோதண்டன் உட்பட 7 திமுக கவுன்சிலர்கள் கலந்து கொள்ளவில்லை.
அதைத்தொடர்ந்து கூட்டத்தில் இருந்த 8 கவுன்சிலர்கள் பெரும்பான்மையுடன் வளர்ச்சி பணிகள் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் காங்கிரஸ் கவுன்சிலர் கோதண்டன் கூட்ட அறைக்குள் வந்தனர். அப்போது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் கூறியதும், கவுன்சிலர்கள் வராமல் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது குறித்து கேள்வி எழுப்பிக்கொண்டே பேரூராட்சி செயல் அலுவலர் ஜனார்த்தனிடம் இருந்த தீர்மான புத்தகத்தை, கவுன்சிலர் கோதண்டன் பிடுங்கி கொண்டு கூட்ட அறையை விட்டு ஓடியுள்ளார்.
இதைத் தொடர்ந்து அவரது பின்னால் செயல் அலுவலர் ஜனர்த்தனம் சென்றார். இதில் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 7-ஆம் தேதி பேரூராட்சி கூட்ட அரங்கில் பேரூராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி வெற்றிவேல் தலைமையில், செயல் அலுவலர் ஜனார்த்தனன் முன்னிலையில் அவசர கூட்டம் நடைபெற்றது.