தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லையில் அதிவேகமாக சென்ற வேன் கவிழ்ந்த பதறவைக்கும் வீடியோ! - road accident

திருநெல்வேலி அருகே அசுர வேகத்தில் சென்ற வேன் கவிழ்ந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சிசிடிவி காட்சி
சிசிடிவி காட்சி

By

Published : Feb 1, 2023, 7:43 AM IST

சிசிடிவி காட்சி

திருநெல்வேலி: தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி வாகைகுளம் என்ற கிராமத்தைச் சேர்ந்த சிலர் குடும்பத்துடன் நேற்று அதிகாலை, விருதுநகர் மாவட்டம் சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு ஒரு வேனில் சென்றுள்ளனர். காமலுதின் என்பவர் வேனை ஓட்டி வந்துள்ளார்.

இந்நிலையில் கோயிலுக்குச் சென்று விட்டு மாலை திருநெல்வேலி மாவட்ட எல்லையான கங்கைகொண்டான் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது, வந்த வேன் திடீரென நிலை தடுமாறி பேரிகார்டுகள் மீது மோதி நடுரோட்டில் தலைக்குப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனிலிருந்த 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த கங்கைகொண்டான் காவல்துறையினர் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல் கட்ட விசாரணையில் வேன் டிரைவர் கமாலுதின் அதி வேகத்தில் வேனை ஓட்டி சென்றுள்ளார்.

திடீரென பேரிகார்டரை பார்த்த உடன் பிரேக்கை அழுத்திய போது கட்டுப்பாட்டை இழந்தது தான் விபத்துக்குக் காரணம் என்பது தெரிய வந்துள்ளது. எனவே ஓட்டுநர் கமாலுதினிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நடு ரோட்டில் வேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளாகும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதையும் படிங்க:13 மாடி குடியிருப்பில் தீ விபத்து - குழந்தைகள் உள்பட 8 பேர் பலி!

ABOUT THE AUTHOR

...view details