ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள இரண்டு லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
கூடுதலாக திறக்கப்பட்ட 800 கனஅடி தண்ணீர் நிறுத்தம்!
ஈரோடு: காவிரி ஆற்று குடிநீர் தேவைக்காக பவானிசாகர் அணையிலிருந்து திறக்கப்பட்ட 800 கனஅடி தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் குடிநீர் பற்றாக்குறை நிலவிவருவதால் குறிப்பாக காவிரி டெல்டா பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பவானிசாகர் அணையிலிருந்து காவிரி ஆற்றிற்கு வினாடிக்கு 800 கனஅடி தண்ணீர் திறக்குமாறு தமிழ்நாடு சுற்றறிக்கை வெளியிட்டதை அடுத்து தண்ணீர் திறக்கப்பட்டது.
கர்நாடகாவிலிருந்து மேட்டூர் அணைக்கு காவிரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் அணையிலிருந்து கூடுதலாக திறந்துவிடப்பட்ட நீர் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது வழக்கம்போல் ஈரோடு மாவட்டத்தின் குடிநீர்த் தேவைக்காக அணையிலிருந்து 205 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.