தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாதாள சாக்காடைத் திட்டத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கிய கார் : 2 மணி நேரம் போராடி மீட்ட ஊழியர்கள் - car stuck at an unmaintained sewer project pit at Erode

ஈரோடு அருகே உள்ள மரப்பாலம் அருகே பாதாள சாக்கடைத் திட்டத்திற்காக தோண்டப்பட்ட பள்ளம் முறையாக மூடப்படாததால், அவ்வழியே சென்ற கார் பள்ளத்தில் சிக்கி, இரண்டு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்டது.

பராமரிப்பற்ற பாதாள சாக்காடைத் திட்டத்திற்கான பள்ளத்தில் சிக்கிய கார்
பராமரிப்பற்ற பாதாள சாக்காடைத் திட்டத்திற்கான பள்ளத்தில் சிக்கிய கார்

By

Published : Oct 2, 2020, 1:56 AM IST

ஈரோடு : மாநகராட்சி முழுவதும் பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படாத பகுதிகளில், திட்டத்திற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் முறையாக மூடப்படாமல் உள்ளன. மேலும் மின்சாரக் கேபிள் பதிக்கும் பணி, தனியார் நிறுவனத்தின் இணைய இணைப்புக்காக தோண்டும் பள்ளங்கள் என ஒரே நேரத்தில் பல்வேறு பணிகள் மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வருகின்றன.

இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் நகரின் பல்வேறு சாலைகளையும் பயன்படுத்துவதில் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ஈரோடு, மரப்பாலம் அருகே பாதாள சாக்கடைத் திட்டத்திற்காக தோண்டப்பட்ட பள்ளம் ஒன்று முறையாக மூடப்படாததால், அவ்வழியே சென்று கொண்டிருந்த கார் ஒன்று அப்பள்ளத்தில் திடீரென சிக்கியது. அதனைத் தொடர்ந்து பதட்டமடைந்த கார் ஓட்டுநர் பாதுகாப்பாக காரிலிருந்து வெளியேறிய நிலையில், மாநகராட்சியினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

பாதாள சாக்காடைத் திட்டத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கிய காரை மீட்கும் மாநகராட்சி ஊழியர்கள்

தொடர்ந்து அங்கு விரைந்த மாநகராட்சி ஊழியர்கள், சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கடுமையாகப் போராடி காரை அப்புறப்படுத்தினர். இந்நிலையில், திட்டப்பணிகளுக்காகத் தோண்டப்படும் அனைத்துப் பள்ளங்களையும் முறையாக மூடி, யாருக்கும் எவ்வித பாதிப்புமில்லாத வகையில் தார் சாலைகளை அமைத்திட வேண்டும் என்று பொது மக்கள் அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி இதே பகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளின்போது ஏற்பட்ட மண்சரிவில், மாநகராட்சி ஒப்பந்த துப்புரவுத் தொழிலாளர் ஆனந்த் சிக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details