திருப்பூரைச் சேர்ந்தவர் ஜாய்சன் கிருபாகரன். இவரது உறவினர் உயிரிழந்ததால், துக்கம் விசாரிப்பதற்காக குடும்பத்தினருடன் சத்தியமங்கலம் நேரு நகருக்கு காரில் சென்றுக்கொண்டிருந்தார். கார் நேரு நகர் ஜெய்சக்தி திரையரங்கம் அருகே சென்றபோது, காரின் முன் பகுதியிலிருந்து தீப்பற்றி எரிந்தது. இதைக் கண்ட கிருபாகரன், அவரது குடும்பத்தினர் உடனடியாக காரை விட்டு இறங்கி தப்பி ஓடினர்.
இது குறித்து அங்கிருந்தவர்கள் சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் அரைமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முழுவதும் தீயில் கருகி சேதமடைந்தது.