ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக உள்ளவர், ஏ.ஜி.வெங்கடாசலம். திமுக எம்எல்ஏவான இவர், சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக, நேற்றிரவு ஈரோட்டில் இருந்து சென்னைக்கு ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் இரவு சுமார் 11.30 மணியளவில் அந்தியூரில் உள்ள தனது வீட்டில் இருந்து, கார் மூலம் ஈரோடு ரயில் நிலையத்திற்கு வாகன ஓட்டுநர் கார்த்திக் என்பவருடன் புறப்பட்டுள்ளார். அப்போது பவானி அருகே வாய்க்கால் பாளையம் என்ற இடத்தில் சுமார் 12 மணிக்கு கார் சென்று கொண்டிருந்தபோது, அங்கிருந்த வளைவில் மழையின் காரணமாக கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.