தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கார் மரத்தில் மோதல்: ஒருவர் உயிரிழப்பு - Car Accident in GopiChettipalayam

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொளப்பலூர் கல்லுமடைபுதூரில் கோவை நோக்கிச் சென்ற கார் சாலையோர மரத்தில் மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கார் விபத்து
கார் விபத்து

By

Published : Dec 27, 2019, 5:07 PM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த அந்தியூர் பகுதியைச் சேர்ந்த 75 வயது முதியவர் பழனிசாமி என்பவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தனது மகள் பூங்கொடியுடன் காரில் சென்றார்.

பொங்கியண்ணன் என்பவர் ஓட்டிச்செல்கையில் கார் கொளப்பலூர் கல்லுமடைப்புதூர் என்ற இடத்தில் எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையோர புளியமரத்தில் மோதியது.

அதனைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்துவந்து விபத்துக்குள்ளான காரில் இருந்தவர்களை மீட்க முயற்சித்தனர். ஆனால் காரின் முன்புற இருக்கையில் அமர்ந்து பயணம் மேற்கொண்ட பழனிசாமி சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் படுகாயங்களுடன் காருக்குள் சிக்கியிருந்த ஓட்டுநர் பொங்கியண்ணன், பூங்கொடி ஆகிய இருவரையும் மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிறுவலூர் காவல் துறையினர் விபத்தில் உயிரிழந்த பழனிசாமியின் உடலை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்து விபத்து குறித்து விசாரித்துவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details