தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 7 பேர் படுகாயம்

ஈரோடு: அந்தியூர் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் படுகாயமடைந்தனர்.

car-accident

By

Published : Jun 3, 2019, 8:39 AM IST

சேலம் மாவட்டம் கண்ணாமூச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரன். இவர் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் குடும்பத்துடன் தங்கி நூல் வியாபாரம் செய்துவருகிறார். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் தனது சொந்த ஊரான கண்ணாமூச்சிக்கு குடும்பத்துடன் வந்துள்ளார்.

பின்னர் விடுமுறைக்குப் பிறகு அவிநாசிக்கு குடும்பத்துடன் காரில் புறப்பட்டுச் சென்றுள்ளார். அப்போது அம்மாபேட்டை அருகே உள்ள எஸ்பி கவுண்டனூர் என்னும் இடத்தில், குப்பிச்சிபாளையம் பகுதியில் இருந்து வந்த சுரேஷ் என்பவரின் கார் மீது தேவேந்திரனின் கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்துக்குள்ளான கார்

இந்த விபத்தில் தேவேந்திரன், அவரது மனைவி கீதா, மகள் சுனிதா, மகன் ஜீவன், மைத்துனர் மெய்யழகன் படுகாயமடைந்தனர். இதேபோல் எதிரே மோதிய காரில் இருந்த சுரேஷ் உட்பட இருவர் படுகாயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை.

பின்னர் அருகில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த அம்மாபேட்டை காவலர்கள், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details