ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். யூனியன் அலுவலகம் அருகே சென்ற போது, எதிரே வந்த டேங்கர் லாரி மீது மோதாமல் இருக்க வாகனத்தை திருப்புகையில், அடுத்தடுத்து வந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதின.
சத்தியமங்கலத்தில் இருசக்கர வாகன விபத்து ஏற்படுத்திய டேங்கர் லாரி சிறைபிடிப்பு - ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் விபத்து
ஈரோடு: சத்தியமங்கலம் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டதற்கு காரணமான டேங்கர் லாரியை இளைஞர்கள் சிறை பிடித்தனர்.
![சத்தியமங்கலத்தில் இருசக்கர வாகன விபத்து ஏற்படுத்திய டேங்கர் லாரி சிறைபிடிப்பு two wheeler accident](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10029201-1069-10029201-1609100355974.jpg)
two wheeler accident
இதில், இருவர் காயமடைந்தனர். இதையடுத்து, விபத்துக்கு காரணமாக டேங்கர் லாரி நிற்காமல் சென்றதால், அதை இளைஞர்கள் துரத்தி பிடித்தனர். மேலும், காயமைடைந்த இளைஞர்களை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
accident-at-satyamangalam
இச்சம்பவத்தால் சத்தியமங்கலம் - கோயம்புத்தூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த காவல்துறையினர், ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு போக்குவரத்து சீர் செய்தனர்.