ஈரோடு சத்தியமங்கலம் அருகே உள்ள சொலவனூர் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாகவும், அதனை வாங்குவதற்கு இளைஞர்கள் அடிக்கடி இப்பகுதிக்கு வந்து செல்வதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் 144 தடை உத்தரவை மீறி சொலவனூர் பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கஞ்சா வாங்குவதற்காக இன்று அப்பகுதியில் சுற்றித் திரிந்துள்ளனர்.
இதைக்கண்ட அப்பகுதி மக்கள், அந்த இளைஞர்களை பிடித்து இங்கே எதற்கு சுற்றித் திரிகிறீர்கள் என கேட்டுள்ளனர்.