தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சத்தியமங்கலத்தில் சிறுத்தையைக் கண்காணிக்க கேமராக்கள் பொருத்தம்! - சத்தியமங்கலம் அருகே சிறுத்தையை கண்காணிக்க கேமராக்கள் பொருத்திய வனத்துறை

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே கரும்புத் தோட்டத்திற்குள் புகுந்த சிறுத்தை குட்டியைக் கண்காணிக்க வனத்துறையினர் சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ளனர்.

கண்காணிப்புக் கேமரா பொருத்திய வனத் துறையினர்
கண்காணிப்புக் கேமரா பொருத்திய வனத் துறையினர்

By

Published : Feb 22, 2020, 12:42 PM IST

ஈரோடு சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பெரியகுளம் மலையடிவாரத்தில், தினேஷ் என்பவருக்குச் சொந்தமான கரும்புத் தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டம் வனத்தை ஒட்டி உள்ளதால் சிறுத்தை, காட்டுப் பன்றி போன்ற விலங்குகள் உள்ளே நுழையாதபடி தடுப்பு வேலிகள் அமைத்துள்ளார்.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை இவரது கரும்புத் தோட்டத்திற்குள் சிறுத்தை ஓடுவதைக் கண்ட விவசாயி ஒருவர், தினேஷூக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனால், அச்சமடைந்த தினேஷ் உடனடியாக வனத் துறையினருக்கு தகவல் கொடுத்தார். அங்கு வந்த வனத் துறையினர், தோட்டத்தில் இருந்த கால் தடத்தை வைத்து சிறுத்தை குட்டிதான் தஞ்சமடைந்துள்ளது என்பதை உறுதிசெய்தனர்.

கரும்பு தோட்டத்தில் சிசிடிவி பொருத்திய பகுதிகளைப் பார்வையிடும் வனத்துறையினர்.

இந்நிலையில், வனப்பகுதியிலிருந்து வந்த சிறுத்தை குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. அந்தக் குட்டி தான் கரும்புத் தோட்டத்திற்குள் சிக்கியதால், அதைத் தேடி தாய் சிறுத்தை எப்போது வேண்டுமானாலும் வரும் என எதிர்பார்த்து வனத்துறையினர் காத்திருக்கின்றனர். இந்நிலையில், தாய் சிறுத்தையைக் கண்காணிப்பதற்கு தோட்டத்தில் முக்கிய வழித்தடங்களில் மூன்று சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், சிறுத்தை நடமாட்டம் இருந்தால் அதற்கேற்ப வனத்துறை தகுந்த நடவடிக்கையை எடுக்கும் என்றும் வனத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: தோட்டத்திற்குள் புகுந்த சிறுத்தை குட்டி: தாயிடம் சேர்க்கும் பணியில் வனத்துறை!

ABOUT THE AUTHOR

...view details