ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைக்கிராமங்களில் மானாவாரி விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. ஊட்டியில் நிலவும் தட்பவெப்பநிலை காணப்படுவதால் மலைக்காய்கறி பயிரான காலிபிளவர், முட்டைகோஸ் சாகுபடி செய்யப்படுகிறது. போதிய மழை பொழிவு இல்லாததால் குறைந்த நீரில் சாகுபடி செய்வதற்கு சொட்டுநீர் பாசனம் முறையை பயன்படுத்தி வருகின்றனர்.
மூன்று மாத பயிரான முட்டைகோஸ் பயிரை நாற்றாங்கால் முறையில் குழிதட்டுகளில் வளர்க்கின்றனர். இந்த குழித்தட்டுகளில் வளர்ந்த பயிரை வாங்கி ஒரு ஏக்கரில் 25 ஆயிரம் பயிர் நடவு செய்து வருகின்றனர். குறுகிய கால பயிரான முட்டைகோஸ் தற்போது அறுவடை செய்யப்பட்டு கோவை, மேட்டுப்பாளையம், சென்னைக்கு அனுப்பப்படுகிறது. அண்மைகாலமாக வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்து கிலோ 120 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், வெங்காயம் பயன்பாடு உள்ள போன்டா, பஜ்ஜி போன்ற கார வகைகளுக்கு முட்டைகோஸ் பயன்படுத்தப்படுகிறது