ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் இரண்டாயிரம் ஏக்கர் பரப்பளவில் முட்டைகோஸ் பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் முட்டைக்கோஸ் கோவை, திருப்பூர், ஈரோடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டுவந்தது.
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக முட்டைக்கோஸ் அறுவடை பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விளைந்துள்ள முட்டைக்கோஸ் பறிக்கப்படாமல் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
முட்டைக்கோஸை உற்பத்திசெய்ய கிலோ ரூ.4 வரை செலவாகிறது. இந்நிலையில், ஒரு கிலோ கோஸ் ஒரு ரூபாய்க்கு விற்கப்படுவதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துவருகின்றனர்.
ஒரு ரூபாய்க்கு விற்பனையாகும் முட்டைக்கோஸ்: வேதனையில் விவசாயிகள் விற்கும் விலையைவிட அதனை பறிக்கும் செலவு அதிகம் என்பதால், பறிக்கப்படாமல் வீணாகும் முட்டைக்கோஸை மாடுகளை விட்டு மேய்க்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ள விவசாயிகள், முட்டைக்கோஸ் பயிரிட்டுள்ளவர்களைக் கணக்கெடுப்புசெய்து நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் பார்க்க: கன்னியாகுமரியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம்!