மத்திய அரசின் சீர்மிகு நகரம் திட்டத்தின்கீழ் ஈரோடு மாவட்டம் காளைமாட்டு சிலை அருகில் மூன்று அடுக்கு வணிக வளாக கட்டடம் அமைய இருக்கிறது. அத்திட்டத்திற்கு 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்குச் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.வி. ராமலிங்கம், தென்னரசு இருவரும் இன்று அடிக்கல் நாட்டினர்.
ஈரோட்டில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகம்: அடிக்கல் நாட்டிய எம்எல்ஏக்கள் - எம்எல்ஏ தென்னரசு
ஈரோடு: சீர்மிகு நகரம் திட்டத்தின்கீழ் அமைய உள்ள வணிக வளாகத்திற்கு சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.வி. ராமலிங்கம், தென்னரசு இருவரும் அடிக்கல் நாட்டினர்.
![ஈரோட்டில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகம்: அடிக்கல் நாட்டிய எம்எல்ஏக்கள் erode](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6365235-thumbnail-3x2-l.jpg)
erode
இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கதிரவன், மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சக்திகணேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
வணிக வளாக தொடக்க விழா
இதையும் படிங்க:ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு - எஸ்.ஆர். பார்த்திபன் எம்.பி. குற்றச்சாட்டு