தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சத்தியமங்கலத்தில் இருந்து இரு மாநில எல்லைக்கும் பேருந்துகள் இயக்கம் - etv news

ஈரோடு: முழு ஊரடங்கு காரணமாக வெளிமாவட்டத்தில் உள்ளவர்கள் சொந்த ஊர் செல்வதற்கு இன்றும் நாளையும் (மே22,23) பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சத்தியமங்கலத்தில் இருந்து இரு மாநில எல்லைக்கும் பேருந்துகள் இயக்கம்
சத்தியமங்கலத்தில் இருந்து இரு மாநில எல்லைக்கும் பேருந்துகள் இயக்கம்

By

Published : May 22, 2021, 10:00 PM IST

தமிழ்நாட்டில் கரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கையாக தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் பொருட்கள் வாங்குவதற்கு இன்றும் நாளையும் (மே22,23) அனைத்து கடைகளும் செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது.

அதே போல வெளிமாவட்டத்தில் உள்ளவர்கள் சொந்த ஊர் செல்வதற்குப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவ்விரண்டு நாட்களுக்கும் அரசு, தனியார் பேருந்துகள் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தாளவாடி, மலை கிராமங்களுக்கு இன்று மாலை முதல் பேருந்துகள் இயக்கப்பட்டன.

திருச்சி, மதுரை, தேனி போன்ற தொலைதூர நகரங்களுக்கு 10 பேருந்துகள் இயக்கப்பட்டன. இன்று மாலை முதல் புறப்படத் தொடங்கிய நிலையில் பேருந்து நிலையத்தில் பயணிகள் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டது. பின்பு, சிறிது நேரம் பயணிகளுக்காக காத்திருந்த பேருந்து காலியாகப் புறப்பட்டு சென்றது.

பேருந்து செல்லும் வழித்தடத்தில் பயணிகள் ஏற வாய்ப்பு உள்ளதாக போக்குவரத்து கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்றும் நாளையும் சத்தியமங்கலம் பணிமனையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு சுமார் 20 பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:'ராஜாராம் மோகன் ராய்' - இந்தியச் சமூகத்தில் சீர்திருத்தத்தை விதைத்த முதல் குரல்

ABOUT THE AUTHOR

...view details