கோவையில் இருந்து பெங்களூருக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆம்னி பேருந்து சத்தியமங்கலம் வழியாக கோபி நோக்கி சென்றுகொண்டிருந்தது. சேலத்திலிருந்து பூசணிக்காய் பாரம் ஏற்றிய லாரி, மைசூரை நோக்கி சென்று சென்றுகொண்டிருந்தது.
அப்போது அரியப்பம்பாளையம் முனியப்பன்கோவில் வளைவில் லாரி திரும்பும்போது எதிரே வந்த ஆம்னி பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பேருந்தின் முகப்பு சேதமடைந்தது.
இந்த விபத்தில் லாரி கேபினில் சிக்கிக்கொண்ட லாரி ஓட்டுநர், கிளீனர் ஆகிய இருவரையும் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டனர்.
நேருக்குநேர் மோதிக்கொண்ட வாகனங்கள் மேலும் விபத்தில் காயமடைந்த 8 பேருந்து பயணிகள் தற்போது சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து காரணமாக சத்தியமங்கலம் கோபி சாலையில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க:ஆமையின் புகைப்படத்தை முகநூலில் பதிவிட்ட இளைஞர் கைது!