தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பேருந்து பைக் மீது மோதி விபத்து! இருவர் பலி - Bus accident

ஈரோடு: புங்கம்பள்ளி கிராமம் அருகே சத்தியமங்கலத்திலிருந்து வந்த அரசுப் பேருந்து முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

erode

By

Published : Jun 4, 2019, 11:42 AM IST

ஈரோடு மாவட்டம் புங்கம்பள்ளி கிராமம் அருகே நேற்றிரவு 11 மணியளவில் சத்தியமங்கலத்திலிருந்து கோவை செல்வதற்காக வந்த அரசுப் பேருந்து முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின்மீது மோதியது.

இந்த விபத்தில் பைக்கில் பயணம் செய்த மூவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் மூவரையும் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பேருந்து பைக்மீது மோதி விபத்து

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தவர்கள் கேரள மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

இதில், பாபு (எ) பூவாஸ் (32) புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள புங்கம்பள்ளி கிராமத்தில் பேக்கரி நடத்தி வருவதாகவும், அந்தக் கடையில் அப்துல் ரஹீம் (30), ஜாபர் (39) இருவரும் பணிபுரிந்து வந்ததாகவும், மூவரும் இரவில் கடையை பூட்டிவிட்டு புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள அறைக்குச் சென்று தங்குவதற்காக சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் ஜாபர் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். பூவாஸ் மேல்சிகிச்சைக்காக கோவை கொண்டு செல்லும்போது உயிரிழந்தார். அப்துல் ரஹீம் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

ABOUT THE AUTHOR

...view details