தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுட்டெரிக்கும் கோடை: இளநீர் விற்பனை அமோகம்! - சத்தியமங்கலம்

ஈரோடு: சத்தியமங்கலம் பகுதியில் கோடையை முன்னிட்டு இளநீர் விற்பனை அதிகரித்துவருகிறது.

சுட்டெரிக்கும் கோடை: இளநீர் விற்பனை அமோகம்!
சுட்டெரிக்கும் கோடை: இளநீர் விற்பனை அமோகம்!

By

Published : Apr 10, 2021, 7:49 AM IST

தமிழ்நாட்டில் கோடை வெப்பம் அதிகரித்துவருவதால் மக்கள் வெயிலின் தாக்கத்தைத் தணிக்கப் பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டுவருகின்றனர். கடுமையான வெயிலில் பயணிப்போர் வெயிலின் தாக்கத்தைத் தணிக்க சாலையோரம் விற்கப்படும் இளநீர் கடைகளில் இளநீர் வாங்கிப் பருகுகின்றனர்.

இயற்கை குளிர் பானம் இளநீர் செயற்கை ரசாயனம் இல்லாமல் இயற்கையாவே சுத்திகரிக்கப்பட்டு உடலுக்குப் புத்துணர்ச்சி அளிப்பதுடன் மனதுக்கு இதமாக இருப்பதாக இளநீர் குடிப்போர் தெரிவித்தனர்.

மேலும் இளநீர் குளிர்ச்சியாக இருப்பதால் தாகம் தணிக்கிறது எனவும் கூறினர். இதனால் சாலையோரக் கடைகளில் இளநீர் வாங்க கூட்டம் அலை மோதுகிறது.

ஒரு இளநீர் 40 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இளநீர் வியாபாரி அங்கேயே சாப்பிடுவதற்கு ஏற்ப அவர்களுக்கு அளிப்பதால் சாலையோரத்தில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் உள்ள தென்னந்தோப்புகளைக் குத்தகைக்கு எடுத்து அதனை சிறு வியாபாரிகள் மூலம் விற்பனை செய்துவருகின்றனர். இதனால் சுமார் 2500 இளநீர் விற்கப்படுவதாகவும், இதன்மூலம் தினந்தோறும் 1000 ரூபாய் வரை கிடைப்பதாகவும் சிறு தொழில் வியாபாரிகள் தெரிவித்தனர்.

சீசன் வியாபாரம் என்பதால் மூன்று மாதம் வியாபாரம் களைகட்டும் என அவர்கள் தெரிவித்தனர். கட்டுமான தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள், கர்ப்பிணிகள், இளைஞர்கள் வீடுகளுக்கு வாங்கிச் சென்று இளநீர் பருகி மகிழ்கின்றனர்.

இதையும் படிங்க:அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி: பிரதமர் மோடிக்கு எம்.பி. ஜோதிமணி கடிதம்

ABOUT THE AUTHOR

...view details