ஈரோடு மாவட்டம் அரச்சலுார் அருகே ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலை மணிமண்டபத்தில் ஆடிப்பெருக்கு விழா நடைபெற்றது. இவ்விழாவை ஆட்சியர் சி.கதிரவன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் மாலை அணிவித்து, தொடங்கி வைத்தனர்.
விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது,முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, தீரன் சின்னமலையின் சுதந்திர போராட்ட உணர்வுக்கு மரியாதை செலுத்தும் வகையில் 1996ஆம் ஆண்டு சென்னை கிண்டியில், தீரன் சின்னமலைக்கு சிலை அமைத்தார்.
இதனைத் தொடர்ந்து ஓடாநிலையில், மணிமண்டபம் அமைத்து, ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவு நாளில் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. விரைவில் அவருக்கு வெண்கல சிலை வளாகத்தில் அமைக்கப்பட உள்ளது.
ஆடிப்பெருக்கு விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டார் ஏப்., 17 ல் தீரன் சின்னமலை பிறந்த நாளில், தமிழக முதலமைச்சரால், அச்சிலை திறந்து வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
- 1,642 கோடி மதிப்பில் அத்திக்கடவு – அவினாசி திட்டம்.
- 40,000 கோடி மதிப்பில் கோதாவரி – காவிரி இணைப்பு திட்டம்.
- பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணனி திட்டம்
இதுபோன்று தமிழ்நாடு மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு செயல்களையும், திட்டங்களையும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது என கூறினார்.