தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாயாற்றில் உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும்: மக்கள் கோரிக்கை! - பெண்ணின் சடலம்

ஈரோடு: மாயாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

bridge

By

Published : Aug 10, 2019, 6:09 PM IST

Updated : Aug 10, 2019, 6:48 PM IST

சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் கல்லாம்பாளையத்தைச் சேர்ந்த நீலியம்மாள் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உடலை ஆம்புலன்ஸ் மூலம் மாயாற்று வழியாக கிராமத்துக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் மாயாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது, ஆபத்தை உணராமல் மரக்கட்டையில் சடலத்தை கயிறுகட்டி இழுத்துச் சென்றனர். அப்போது நீரின் வேகம் காரணமாக சடலத்துடன் வந்த உறவினர்களும் நீண்ட தூரம் இழுத்துச் செல்லப்பட்டு பின் கரையை அடைந்தனர். இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதையடுத்து மாயாற்றின் குறுக்கே உயர்மட்டம் பாலம் கட்டினால் இதுபோன்ற அவலங்கள் ஏற்படாது என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும்

இது தொடர்பாக அப்பகுதியில் வசிக்கும் சுதாகர் என்பவர் கூறியதாவது, "பல வருடங்களாக மாயாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டித்தர கேட்டு வருகிறோம். ஆனால் அரசு அதனை காதில் போட்டுக்கொள்ளாமல் இருக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும்" என்று கூறினார்.

இது தொடர்பான முந்தைய செய்தி- ஆற்றில் மிதந்து சென்ற பெண்ணின் சடலம் - வைரல் வீடியோ!

Last Updated : Aug 10, 2019, 6:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details