தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மூலப்பொருள் கிடைக்காமல் தவிக்கும் செங்கல் சூளை தொழிலாளர்கள்

சத்தியமங்கலம் அருகே செம்மண் கிடைக்காததால் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக செங்கல் சூளை தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வாழ்வாதாரத்தை இழக்கும் நிலையில் செங்கல் சூளை தொழிலாளர்கள்
வாழ்வாதாரத்தை இழக்கும் நிலையில் செங்கல் சூளை தொழிலாளர்கள்

By

Published : Jul 14, 2021, 1:19 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் குறிப்பாக தாசப்ப கவுண்டன்புதூர் கிராமத்தில் செங்கல் சூளை அதிக எண்ணிக்கையில் உள்ளன. இங்குள்ள சூளையில் உற்பத்தியாகும் செங்கல் ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

தற்போது செங்கல் தயாரிப்புக்கு தேவையான செம்மண் எடுப்பதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை என தெரிவிக்கும் தொழிலாளர்கள், செங்கல் தொழில் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினர். இதனால் ஏராளமானோர் பேர் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

வாழ்வாதாரத்தை இழக்கும் நிலையில் செங்கல் சூளை தொழிலாளர்கள்

கோரிக்கை

எனவே செங்கல் தயாரிக்க தேவையான மூலப்பொருளான செம்மண் எடுத்துக்கொள்ள அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: '45 வருடங்கள்... அடிப்படை வசதி இல்லாமல் தவிக்கும் மக்கள்!'

ABOUT THE AUTHOR

...view details