தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈரோட்டில் இரவில் பூத்த பிரம்ம கமலம் பூ - ஈரோடு வீரப்பம்பாளையத்தை சேர்ந்த சதீஷ்குமார்

ஈரோட்டில் வீட்டு தோட்டத்தில் வளர்க்கப்பட்டு வந்த வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் பூ நேற்று(டிச.5) இரவு திடீரென பூத்தது.

Etv Bharatஈரோட்டில் இரவில் பூத்த பிரம்ம கமலம் பூ
Etv Bharatஈரோட்டில் இரவில் பூத்த பிரம்ம கமலம் பூ

By

Published : Dec 6, 2022, 12:55 PM IST

ஈரோடு:பிரம்ம கமலம் பூ ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அதுவும் இரவு மட்டும் பூக்க கூடிய ஒரு பூ வகையாகும். இந்த பூ இரவில் பூத்து விடிவதற்குள் வாடி விடும்.

ஈரோடு வீரப்பம்பாளையத்தை சேர்ந்த சதீஷ்குமார், பாரதி குடும்பத்தினர் வீட்டில் பல்வேறு வகையான பூச்செடிகளை வளர்த்து வருகின்றனர்.

இதில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் பிரம்ம கமலம் செடியை வைத்தார். இந்நிலையில், இந்த செடியில் நேற்று(டிச.5) இரவு முதல் முறையாக மொட்டு வைத்து இரவு சுமார் 11.30 மணியளவில் பூத்தது.

ஈரோட்டில் இரவில் பூத்த பிரம்ம கமலம் பூ

இதைப்பார்த்த சதீஷ்குமார், பாரதி தம்பதி பிரம்ம கமலம் பூ இருக்கும் தொட்டியில், தீபம் ஏற்றி வழிபட்டனா். இந்த பூ பூக்கும்போது பார்த்தால் பல நன்மைகள் நடக்கும் என்பது ஐதீகம். இதனால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் பிரம்ம கமலம் பூ பூத்தவுடன் வந்து ஆச்சர்யத்துடன் பார்த்து சென்றனா். மேலும் இந்த பூவில் இருந்து நறுமணம் அந்த வீதி முழுக்க வீசியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சுவாமிமலை கார்த்திகை தீபத்திருவிழா தேரோட்டம்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details