தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயில் திருவிழாவில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு - சிறுவன் உயிரிழப்பு

ஈரோடு: தெப்பக்குளத்தில் அமைக்கப்பட்டிருந்த கிரில் கம்பியில் ஏற்பட்ட மின்கசிவினால் 13 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சிறுவன் உயிரிழப்பு
சிறுவன் உயிரிழப்பு

By

Published : Jan 11, 2021, 10:02 AM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பிரசித்திப் பெற்ற பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் திருவிழா கடந்த ஒரு வார காலம் நடைபெற்றுவருகிறது. இத்திருவிழாவின் இறுதிப்பகுதியாக நேற்று பாரியூர் கோயிலிருந்து புறப்பட்ட மலர் பல்லக்கு (முத்து பல்லக்கு) கோபிசெட்டிபாளைம் நகரின் மையத்தில் அமைந்துள்ள தெப்பக்குளத்திற்கு நேற்று (ஜன. 10) அதிகாலை வந்தடைந்தது.

ஒவ்வொரு ஆண்டும் தெப்பக்குளத்திற்கு வரும் அம்மனுக்கு அன்று இரவு சிறப்பு பூஜைகள், அபிஷேங்கள் செய்யப்படுவது வழக்கம். அதுபோல் இந்தாண்டும் தெப்பக்குளத்திற்கு வந்த முத்துப்பல்லக்கில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு செய்ய கோயில் நிர்வாகம், கோபிசெட்டிபாளையம் நகர் பொதுமக்கள் சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

கோயில் திருவிழாவில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு

தெப்பக்குளம் பகுதி முழுவதும் மின் விளக்குகள் அலங்காரம், வாண வேடிக்கைகள் எனத் திருவிழா களைகட்டியது. இந்நிகழ்வைக் காண கோபிசெட்டிபாளையம் நகர்ப் பகுதியில் உள்ள 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குழந்தைகளுடனும் குடும்பத்தினர்களுடனும் கலந்துகொண்டு சிறப்பித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது கபிலர் வீதி பகுதியிலிருந்து தெப்பக்குளம் உற்சவத்தைக் காணவந்திருந்த கணேஷ், சாலினிதேவி தம்பதியினர் தங்களது குழந்தைகள் மதன்குமார், மதுமிதா ஆகியோருடன் தெப்பக்குளத்திற்கு வந்திருந்தனர்.

அப்போது குளத்தை வேடிக்கைப் பார்க்க மதன்குமார் குளத்தின் கரைகளில் அமைக்கப்பட்டிருந்த இருப்பு கிரில் கம்பியைப் பிடித்து குளத்தை எட்டிப்பார்க்கையில் அதில் ஏற்பட்ட மின்கசிவுனால் சிறுவன் தூக்கி வீசப்பட்டார்.

அருகில் இருந்த பெற்றோர், பொதுமக்கள் சிறுவனைத் தூக்கிக்கொண்டு கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்குச் சென்றனர். அங்கு சிறுவனைப் பரிசோனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தினால், அம்மனின் தெப்பக்குள உற்சவசத்திற்கு வந்திருந்த பொதுமக்கள், சிறுவனின் பெற்றோர் அதிச்சியடைந்தனர்.

சிறுவன் உயிரிழப்பு

இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பாரியூர் அம்மனின் தெப்பக்குள உற்சவம் ரத்துசெய்யப்பட்டது. திருவிழாக்களில் மின் விளக்குள் அமைக்கும் குத்தகைதாரர்கள் தரமான ஒயர்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் மின்கசிவு ஏற்பட்டுள்ளதா எனப் பரிசோதனை செய்து உறுதிப்படுத்த வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.

மின்கசிவு ஏற்பட காரணமாக இருந்த மின் விளக்கு அலங்கார குத்தகைதாரரை கைதுசெய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கைவைத்துள்ளனர்.

இதையும் படிங்க :ஆட்சியர் அலுவலகத்தில் காப்பாற்றுங்கள் என கதறிய இளைஞர், மாடியிலிருந்து குதித்து தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details